'இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் வாங்க ஆசைப்பட்ட இளம்பெண்'... 'யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்'... மான் கொடுத்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் வாங்க ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு நடந்த துயரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனிலுள்ள பிரபல Richmond Park என்னும் மான்கள் பூங்காவிற்கு இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மான்களைப் பார்த்த அவர், அதனுடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டால் அதிகமாக லைக்ஸ் வரும், அந்த புகைப்படமும் பிரபலமாகும் என எண்ணியுள்ளார். இதையடுத்து மானின் அருகில் சென்ற அந்த பெண் மானுடன் போட்டோ எடுக்க முயன்றுள்ளார். அதுவரை சாதுவாக இருந்த அந்த மான் திடீரென தனது முன்னிரண்டு கால்களாலும் அந்த பெண்ணின் பின் பக்கத்தில் ஒரு உதை விட்டது.
இதை அந்த பூங்காவிலிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. மான் உதைத்ததில் அந்த பெண் வேகமாகக் கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் எதேச்சையாக அந்த மான் உதைத்ததை போட்டோ எடுத்து விட்டார். தற்போது அந்த புகைப்படத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போலீசார், ''மான்கள் எல்லாம் திரைப்படங்களில் காட்டப்படுவது போல கியூட்டானவை அல்ல. எனவே தான் மான்களை விட்டு 50 மீட்டாராவது தள்ளி இருங்கள் என அனைவரையும் அறிவுறுத்துகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்கள்.
இதனிடையே மானுடன் போட்டோ போட்டு பிரபலம் ஆக வேண்டும் என அந்த பெண் விரும்பிய நிலையில், மான் உதைத்த போட்டோ மூலம் எந்த பெண் சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் பிரபலம் ஆகி விட்டார்.

மற்ற செய்திகள்
