'மேட்ச் நடுவுல செல்ஃபியா?.. என்னயா நடக்குது இங்க?'.. வேற லெவல் சம்பவம்!.. என்ன இப்படி கெளம்பிட்டாங்க'?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் செல்ஃபி எடுப்பது போல போஸ் கொடுத்த சம்பவம் ரசிகர்களின் கவனைத்தை ஈர்த்துள்ளது.
கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி வழக்கம் போல டாப் ஆர்டரில் படு சொதப்பல் செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிதிஷ் ராணா - சுப்மன் கில் ஜோடி நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பான பார்ட்னர்ஷிப் அமையும் என எதிர்பார்த்த நிலையில் சுப்மன் கில் 11 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அவர் அவுட்டான அடுத்த சில ஓவர்களில் நிதிஷ் ராணாவு சேட்டன் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அவுட்டானார்.
பின்னர் வந்த ராகுல் திரிபாதி - சுனில் நரேனுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றார். ஆனால் உனத்கட் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற சுனில் நரேன் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 54 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது.
அதன் பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி கேப்டன் மார்கனும் ரன் அவுட்டாகவே, ராகுல் திரிபாதி மட்டும் தனி ஆளாக பேட்டிங்கில் போராடிக்கொண்டிருந்தார். அப்போது முஸ்தஃபிசுர் ரகுமான் வீசிய ஓவரில், திரிபாதி பந்தை தூக்கி அடித்தார். ஆனால், அது லாங் ஆனில் நின்று கொண்டிருந்த ரியான் பராக்கிடம் கேட்ச்சாக சிக்கியது.
எனினும், அவர் கேட்ச் பிடித்ததைவிட அதைக் கொண்டாடிய விதம் தான் தற்போது வைரலாகி உள்ளது. அஸ்ஸாமை பூர்வீகமாகக் கொண்ட ரியான் பராக், அவ்வப்போது போட்டியின் நடுவே பிஹு நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். ஆனால், இம்முறை இந்த போட்டியில் ராஜஸ்தான் பவுலர்களுக்கு பிரஷர் கொடுத்துக் கொண்டிருந்த திரிபாதியின் விக்கெட்டை கொண்டாடும் வகையில், அருகில் இருந்த திவாட்டியாவையும் அழைத்து, தான் கேட்ச் பிடித்த கிரிக்கெட் பந்தால் செல்ஃபி எடுப்பது போல் போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.