‘மூச்சுத் திணறல், காய்ச்சல் இருக்கா’... ‘பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட’... ‘பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 12, 2020 10:15 AM

கொரோனா வைரஸ் அச்சத்தால் மூச்சுத் திணறல், ஜலதோஷம், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Palani Dhandayuthapani temple seeks on devotees support

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு  நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகள் என பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூச்சுத் திணறல், ஜலதோஷம், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறு நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள், மலைக்கோயில், ரோப் கார், மின் இழுவை ரயில் நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த் தடுப்பு முதலுதவி சிகிச்சை மையங்களில் உள்ள மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால், திருப்பதி, சபரிமலை உள்ளிட்ட உலக பிரசித்திபெற்ற கோவில்களில் கொரோனா அறிகுறியுடன் இருக்கும் பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு கூறியுள்ளநிலையில், தற்போது பழனியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : #PALANI #MURUGAN #TEMPLE #CORONAVIRUS