'நிர்வாண பார்ட்டி' போஸ்டருக்கு பின்னால்...இப்படியொரு திட்டமா?..சிக்கிய மாணவன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 01, 2019 12:09 PM

சில நாட்களுக்கு முன் நிர்வாண பார்ட்டி போஸ்டர் நடத்துவதாக கோவா முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.எங்கு,எப்போது ஆகிய விவரங்கள் எதுவும் போஸ்டரில் இடம் பெறவில்லை.இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவா போலீசார் அந்த போஸ்டர் குறித்து விசாரித்தனர்.மேலும் கோவாவில் இதுபோன்ற பார்ட்டிகள் நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

College Student Behind Nude Party Posters in Goa; Police

இந்தநிலையில் இந்த போஸ்டருக்கு பின்னால் இருந்த இளைஞனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதுகுறித்து  அந்த மாணவன் கூறுகையில்,''கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டேன்.பணம் சம்பாதிக்க என்ன வழி என்று யோசிக்கையில் இந்த ஐடியா தோன்றியது.இதனால் நெட்டில் இருந்து சில புகைப்படங்களை எடுத்து இந்த போஸ்டரை ரெடி செய்தேன்.இதற்கு முன்பணம் பெறவும் முடிவு செய்திருந்தேன்.சபல நபர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ஓடிவிடுவது தான் எனது திட்டம்.

ஆனால் நான் எதிர்பாராத வகையில் ஏகப்பட்ட கால்கள் எனக்கு வந்தன.வெளிநாட்டில் இருந்தும் கால்கள் வந்தன.இதனால் பயந்து போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். மீண்டும் போனை ஆன் செய்தபோது போலீசில் மாட்டிக்கொண்டேன்,''என தெரிவித்துள்ளார்.அந்த இளைஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #POLICE