‘நான் வந்தா என்னை எடுத்துட்டு போயிடுவாங்க’... 'மோடி அங்கிள் சொல்லி இருக்காரு'... 'சிறுவனின் அப்பாவித்தனமான க்யூட் வீடியோ’... ‘ஷேர் செய்த திரையுலக பிரபலங்கள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன் அம்மா வெளியே வர அழைத்தபோது வராமல், ஊரடங்கு உத்தரவை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை மிக க்யூட்டாக சிறுவன் ஒருவன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்றுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அப்போது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், சிறுவர்கள் மிகத் தெளிவாக ஊரடங்கு குறித்து பேசும் வீடியோ அவ்வப்போது வெளியாகி வைரலாவது வழக்கம். இதேபோல் இன்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு அம்மா தனது மகனிடம், "ஓகே, நாம் இப்போது வெளியே செல்வோமா?" என்று கேட்க, அதற்கு அவரது மகன், "இல்லை தயாராகவில்லை" என்கிறான்.
"இப்போது தானே நீ தயார் என்று சொன்னாய்" என்று அம்மா கேட்க, "நான் தயாராகவில்லை” என்கிறான். ஏன் என்று அம்மா கேட்க, “இது ஊரடங்கு. மோடி அங்கிள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்" என அழுதுகொண்டே பதிலளிக்கிறான்.
மீண்டும் சிறுவனின் அம்மா, "பரவாயில்லை, வெளியே சென்றுவிட்டு வரலாம்" என்று சொல்ல, அதற்கு, "அரசாங்கம் என்னை எடுத்துக் கொள்ளும். ஏனென்றால் மோடி அங்கிள் என்னை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்" என அப்பாவித்தனமாகச் சொல்கிறான்.
பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் இந்த சிறுவனின் பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கேர், பிரதமர் மோடியை டேக் செய்திருக்கிறார். இதேபோல், தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஹரிஷ் ஷங்கரும் இந்த வீடியோவுக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
