'ரகசியமா' குக்கரை பயன்படுத்தி... 'வாலிபர்' செஞ்ச வேலை... 'அதிர்ந்து' போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் ஜேக்கப்(34). இவர் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பியுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்காமல் பலரும் அல்லாடி வருகின்றனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராஜேஷ் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த குக்கரை வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை தன்னுடைய சொகுசு காரில் எடுத்து சென்று விற்பனை செய்து வந்துள்ளார். திடீரென்று அவரது வீட்டில் இருந்து சாராய வாடை வீசியதால் அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரது வீட்டை பரிசோதனை செய்தனர்.
அப்போது வெளிநாட்டு குக்கரில் சாராயம் காய்ச்சி, அதனை காரில் கொண்டு சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜேஷை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர், பழவகைகள், மது பாட்டிகள் மற்றும் 5 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரது சொகுசு காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
