"பீல்டிங்" சிறப்பா பண்ணனுமா? ... நம்ம "சூப்பர்ஸ்டார" ஃபாலோ பண்ணுங்க! ... வைரலான 'அஸ்வினின்' ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கின் காரணமாக அனைத்து மக்களும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். குறிப்பாக பிரபலங்கள் தங்களது இந்த நேரத்தினை அதிகமாக சமூக வலைத்தளங்களில் செலவு செய்து வருகின்றனர். தங்களது ரசிகர்களுடன் உரையாடுவது, வீடியோ மற்றும் மீம்ஸ்களை பகிர்வது என எப்போதும் ஆக்டிவ் மோடில் இருந்து வருகின்றனர்.

அதிலும் இந்திய அணி பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நேரத்தினை ட்விட்டர் பக்கத்தில் அதிகம் களித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று அதிகம் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்தின் வீடியோ ஒன்றை பதிவிட்ட அஸ்வின், 'சிறந்த முறையில் பீல்டிங் செய்ய வேண்டுமென்றால் தலைவரை பாலோ செய்யவும். ஆனால் வெடிகுண்டுகளை வைத்து கொண்டு அல்ல. பந்துகளை கொண்டு' என கேப்ஷன் இட்டுள்ளார். மனிதன் படத்தில் வரும் அந்த வீடியோவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், எதிரிகள் வீசும் வெடிகுண்டுகளை தாவிப் பிடித்து அதனை மீண்டும் எதிரிகள் மீது எரிந்து அவர்களை காலி செய்வது குறிப்பிடத்தக்கது.
Online coaching alert:
some fielding drills. Please try it at home but not with explosives, strictly soft balls. 😂 by our Thalaivar #lockdownlessons lmao https://t.co/b57gSMnDYh
— lets stay indoors India 🇮🇳 (@ashwinravi99) April 10, 2020
