கொரோனாவுக்கு 'தீர்வு' கண்ட பெண் விஞ்ஞானியை... மிரட்டி 'பணிய' வைத்ததா சீனா?... வெளியான 'புதிய' தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா உண்மைகளை மறைத்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் சூழ்நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி (வவ்வால் பெண்மணி என இவருக்கு பட்டப்பெயர் உண்டு) ஷீ லிங்லி என்பவர் மிகப்பிரபலமான வைரஸ் ஆய்வாளர்களில் ஒருவர். வைரஸ் தொடர்பில் அதன் மரபணுக்களை வரிசைப்படுத்தி, தீர்வையும் வெளியிட்ட இவர், சீனாவின் வவ்வால் குகைகளில் மறைந்திருக்கும் சார்ஸ் போன்ற கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர்.
இவர் கடந்த ஜனவரி மாதம் வுஹான் நகரில் கொரோனா பரவிய தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அது கொரோனா என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து மூன்றே நாட்களில் அதன் மரபணுவை வரிசைப்படுத்தி, கொரோனாவுக்கான தீர்வையும் கண்டறிந்துள்ளார். ஆனால் இதனை வெளியில் விடக்கூடாது என சீன அரசாங்கம் அவரை மிரட்டி பணிய வைத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் கொரோனா உள்ளிட்ட மேலதிக தகவல்களை வெளியிட ஷீ மற்றும் அவரது குழுவினருக்கு சீன அரசு தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது.
உச்சகட்டமாக இச்சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் ஷாங்காய் ஆய்வாளர்கள் குழு ஒன்று கொரோனாவுக்கான தீர்வை வெளியிட்டது.அடுத்த இரு நாட்களில் ஷீயின் ஆய்வகமும் விசித்திர காரணங்களுக்காக மூடப்பட்டு இருக்கிறது. கொரோனா அதிகமாக பரவிய காலகட்டத்தில் 2 மாதங்கள் சீனாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் ஷீயிடம் பேசிய பத்திரிகையாளர் ஒருவரிடம் ஷீ இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.