'ஒன்னு இல்ல நாங்க 2 வைரஸ்களோட போராடிட்டு இருக்கோம்'... நாட்டின் 'நிலை' குறித்து ஈரான் 'அதிபர்' கருத்து...
முகப்பு > செய்திகள் > உலகம்ஈரான் 2 வைரஸ்களுடன் போராடிக் கொண்டிருப்பதாக அதிபர் ஹசன் ரவ்ஹான் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் முதல்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஈரானில் இதுவரை 70,000க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள ஈரான் அதிபர் ஹசன் ரஹ்வானி, "ஐரோப்பிய நாடுகள் கொரோனா எனும் ஒரு வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஈரான் இரண்டு வைரஸ்களுடன் (கொரோனா வைரஸ், பொருளாதார தடை) போராடிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறி ஈரான் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீப் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துள்ளார்.