'லாக்டவுனால் ஸ்கூலுக்கு லீவ்!'...‘வீட்டில் சும்மா இருக்க முடியாமல், ஆசிரியர் பார்த்த வேலை!’.. கைது செய்த போலீஸார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி மாவட்டம் இராயகிரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கள்ளச்சாராயம் காய்ச்சி போலீசில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் இராயகிரியில், பிச்சாண்டி என்பவருக்கு சொந்தமாக 30 ஏக்கர் பரப்பளவில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தை தெற்கு சத்திரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் 55 வயதான சிவன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
தளவாய்புரத்தை சேர்ந்த 35 வயதான அந்தோணிராஜ் என்பவர், ஆசிரியர் சிவனின் நண்பர் என தெரியவருகிறது. இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்று என்பதால் ,டாஸ்மாக் கடை மூடப்பட்டதில் இருந்து குடிக்க முடியாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டு வீட்டில் சும்மா இருப்பதால் நண்பருடன் சேர்ந்து குத்தகைக்கு எடுத்த கரும்பு தோப்பிற்குள் சாராயம் காய்ச்சி வந்துள்ளார் சிவன்.
இந்த தகவல் சிவகிரி தனிப் பிரிவு போலீசாருக்கு கிடைத்ததையடுத்து ரகசிய தகவலின் பேரில் தோப்பிற்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் ஊறல் போட்டு காய்ச்சி ஒளித்து வைத்திருந்த கள்ளச்சாராயத்தை தனிப்பிரிவு போலீசார் கண்டறிந்து சிவன் மற்றும் அந்தோணிராஜை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து 4 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் மற்றும் அதைக் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆசிரியர் சிவன் மற்றும் அந்தோணி ராஜன் கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.