இந்தியாவின் 'நுழைவாயில்' நகரத்தில்... கொரோனாவால் 'உயிரிழந்தவர்களின்' எண்ணிக்கை... 100 ஆக உயர்வு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கின்றன. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9352 ஆக உள்ளது. இதில் 324 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் 1985 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதில் தலைநகர் மும்பையில் மட்டும் 1549 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மும்பையில் தற்போது 100 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இங்கு புதிதாக 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #MUMBAI #CORONA #CORONAVIRUS
