'அடேய்!! உங்க ஊர்லதான் இது பேர் வேர்ல்டு சேஸ்!'.. 'எங்க ஊர்ல இதுக்கு பேரு என்ன தெரியுமா?'.. வைரலாகும் விளையாட்டு! வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 13, 2020 10:53 PM

பல நேரங்களில் உள்ளுரில் சாதாரனமாக விளையாடப்படும் விளையாட்டுகள் ஓவர் நைட்டில் உலக விளையாட்டாக மாறிவிடுவதுண்டு.

our running and chase game becomes world chase video

சிறு வயதில் நாம் சாதாரணமாக விளையாடும் running and catching என்று சொல்லப்படும் ஓடிப் பிடித்து விளையாடும் ஒரு விளையாட்டு வேற லெவல் விளையாட்டாக வேர்ல்டு சேஸ் என்கிற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதும் இந்த விளையாட்டிற்கு  பல்லாயிரக்கணக்கானோர் ரசிகர்களாகிவிட்டதுதான் மேலும் இதில் உள்ள ஆச்சரியம்.

ஒரு அரங்கினுள் இருக்கும் பல்வேறு  தடுப்புக் கம்பிகளுடன் கூடிய உயரமான சிறு சிறு மேடைகள் வழியே ஒருவரை துரத்தியும் விரட்டியும் பிடித்துதான் வெற்றி பெற வேண்டும். இந்த விளையாட்டைதான் நம்மூரில் ஓடிப்பிடித்து விளையாடும் எதார்த்தமான விளையாட்டாக

சிறு குழந்தைகள் விளையாடுவதுண்டு. இந்த விளையாட்டின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.