'மனைவி ஒருபக்கம்'...'சென்னையில் பரிதாபமாக இறந்த மருத்துவர்'...இறந்தும் அவதிப்படும் டாக்டரின் உடல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல்லூரில் சிகிச்சை அளித்து வந்தார். இதையடுத்து அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நெல்லூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இதற்கிடையே நோயின் தீவிரம் அதிகரித்ததால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
வானகரத்தில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அம்பத்தூர் அயப்பாக்கம் சாலையில் இருக்கும், மின் மயானத்தில் அடக்கம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பு உடை அணிந்து இன்று எடுத்து சென்றனர். இதையறிந்த அந்த பகுதி மக்கள் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உடலை அடக்கம் செய்வதால் எந்த தொற்றும் ஏற்படாது என்று காவல்துறையினர் சமாதானம் செய்தனர். இதற்கிடையே மருத்துவரின் மனைவியும் கொரோனா தொற்றினால் நெல்லூரில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.