‘மகளின் க்யூட் ஃபோட்டோவை பகிர்ந்து’... ‘மெசேஜ் சொன்ன இந்திய வீரர்’... ‘நெகிழ்ச்சியான ரசிகர்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 31, 2020 06:52 PM

எந்த தந்தையாக இருந்தாலும் மகள் மீது, தனி பாசம் உண்டு. இந்நிலையில் தனது மகளின் புகைப்படத்தை பதிவுசெய்து இந்திய வீரர் ஒருவர் கூறிய அன்பு வார்த்தைகள் ரசிகர்களின் மனதை உருக செய்துள்ளது.

Shami Wins Over Social Media With Adorable Post For His Daughter

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 5 டி-20 போட்டிகளில் தற்போது 4 டி-20 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதில் 3-வது டி20 போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து இந்தியாவின் விறுவிறுப்பான வெற்றிக்கு காரணமான ஒருவரான முகமது ஷமி, தனது மகளின் அபிமான படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மஞ்சள் நிற சேலை அணிந்துள்ளார். தற்போது நியூசிலாந்தில் இருக்கும் ஷமி, தனது அன்பு மகளை பிரிந்து இருக்கும் தருணத்தை அழகாக பகிர்ந்துள்ளார்.  அதில், ‘அழகாக இருங்கீங்க மகளே, லவ் யூ சோ மச், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் மகளே. விரைவில் உங்களை காண வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

Tags : #MOHAMMADSHAMI #IND VS NZ