கொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம்? ... அரசியல் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை! தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கும் கட்சிகள், தலைவர்கள் யார்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 08, 2020 10:24 AM

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அதிகமாக அச்சுறுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதம் 14 - ஆம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், ஊரடங்கின் பொது தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருந்தது.

Modi video conferencing calls with Political leaders today

இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் பிரதமர்களுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அதேபோல் , காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, திமுக கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.