'அட, இந்த பிளான் நம்ம லிஸ்ட்லயே இல்லையே' ... 'கொரோனா' விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க ... 'திருவண்ணாமலை' போலீசாரின் வித்தியாசமான முயற்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓழுங்காக வீட்டிற்குள் இருக்காமல் தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்களுக்கு போலீசார் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை காவல்துறையினர் பல்வேறு விதமாக மக்களிடையே கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர். சிலர் கொரோனா விழிப்புணர்வு என்ன என்பதை பாட்டு மூலமாகவும் பாடி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட போலீசார் திரைப்படங்களில் வரும் போஸ்டர்களைக் கொண்டு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட போலீசாரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சினிமா போஸ்டர்களை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மக்களிடையே எளிதாக சென்று சேரும் என்ற யோசனையில் திருவண்ணாமலை போலீசாரின் இந்த முயற்சி மக்களின் பாராட்டைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.