'ஷூ லேஸ்' கட்டத் தெரியாதவங்க.. எல்லாம் 'பேச' வந்துட்டாங்க... யாரை சொல்றாரு ரவி சாஸ்திரி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 26, 2019 03:54 PM
ஷூ லேஸ் கட்டத் தெரியாதவங்க எல்லாம் பேச வந்துட்டாங்க என, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான டோனி தற்போது நீண்ட விடுப்பில் இருக்கிறார். ஆனால் அவர் ஓய்வு பெறப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகக்கோப்பை முடிந்ததில் இருந்தே இந்த விவகாரம் இந்தியளவில் பேசுபொருளாக உள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,'' டோனி குறித்து பேசும் பாதி பேருக்கு ஷூ லேஸ் கூட சரியாக கட்ட தெரியாது. அவர் இந்தியாவுக்காக எவ்வளவோ செய்து இருக்கிறார். கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் ஆடிவரும் டோனிக்கு தான் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது தெரியும்.
ஒருவேளை அவர்களுக்கு பேச வேறு விஷயம் இல்லாமல் இருக்கலாம். டோனி எப்போது அணியை விட்டு போக வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போது போகட்டும். டோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற உரிமையை பெற்றுள்ளார். இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம்,'' என தெரிவித்துள்ளார்.