"இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா?..." 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 27, 2020 08:48 AM

சென்னை காமராஜர் சாலையில் மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் கசங்காமல் சாலையை அலங்கரித்துள்ளதால் பார்ப்பதற்கே ரம்மியமான காட்சியாக உள்ளது. வெளிநாடுகளை மட்டுமே பார்த்து வியந்திருந்த நமது கண்களால், எழில்மிகு சென்னை இத்தனை நாளாக ஒழித்து வைத்திருந்த அழகை இன்றுதான் காணமுடிகிறது.

chennai lockdown kamarajar salai full of flowers

வாகனப் போக்குவரத்து இல்லாததால், சாலையில் உதிர்ந்திருந்த பூக்கள் கசங்காமல் இருப்பது இயற்கையின் வியப்பான அழகை எடுத்துக் காட்டியுள்ளது. மற்ற சாதாரண தினங்களில் இப்படியான காட்சியைக் காண்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

சென்னையில் வரும் புதன்கிழமை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதற்குள் இந்த அழகை கண்டு ரசித்துக் கொள்ளலாம்.

காமராசர் சாலையின் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை இருக்கக்கூடிய சாலையோர மரங்களில் இருந்து கொட்டிக் கிடக்கும் இந்தப் பூக்கள் சாலை முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கின்றது. சிதறிக்கிடக்கும் பூக்கள் பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கின்றது.