சென்னை: 'கழுத்தில் சிக்கிக்கொண்ட காற்றாடி மாஞ்சா நூல்!' .. 'இருசக்கர' வாகனத்தில் போய்க் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த 'பரிதாப கதி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 26, 2020 07:53 AM

சென்னை மதுரவாயலில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தில் பட்டு கழுத்து அறுபட்டதில் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார் ‌.

manja slits in chennai mans neck during driving

சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பவர், மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழியில் இருந்த மாஞ்சா அவரது கழுத்தில் பட்டு அவரது கழுத்து அறுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நிலைதடுமாறி சம்பவ இடத்திலேயே கீழே விழுந்த பரசுராமன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கில் வெளியே செல்லமுடியாமல் மாஞ்சா நூல் கொண்டு காற்றாடி விடும் சில இளைஞர்களால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.

இதேபோல் காற்றாடி நூல் பட்டு வேலூரில் காவலர் ஒருவரின் கழுத்தறுபட்ட சம்பவமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #KITE