'எம்.பி குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா...' 'எப்படி வந்துச்சுன்னு சந்தேகமா இருக்கு...' தனிமைப்படுத்தி கண்காணிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்னூல் தொகுதி எம்.பி-யின் குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று வரை ஆந்திராவில் 1097 பேரை தாக்கியுள்ளது. இதில் 31 உயிரிழந்துள்ளனர். சுமார் 231 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆந்திராவில் எம்.பி குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி டாக்டர் சஞ்சீவ் குமார் ஆந்திராவின் கர்னூல் தொகுதி எம்.பி. இவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக எம்.பி டாக்டர் சஞ்சீவ் குமார், தனது 80 வயது தந்தை, இரு சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் இருவர் மற்றும் மருமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர்களின் உடல்நிலை சமநிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுவரை கர்னூல் மாவட்டத்தில் மட்டும் 279 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் எம்.பி அவர்களின் குடும்பத்தாருக்கு எவரிடம் இருந்து கொரோனா தொற்று பரவியது என்பது இன்னும் சந்தேகத்திற்குரிய ஒன்றாக உள்ளது. மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்த நபர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
