"ஊரடங்கை நீட்டிக்கணும்"... விருப்பம் தெரிவித்த 'ஆறு' மாநிலங்கள்... 'தமிழக' அரசின் நிலைப்பாடு என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 26, 2020 08:47 PM

நாடு முழுவதும் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்  டெல்லி உட்பட ஆறு மாநிலங்கள் ஊரடங்கை அடுத்து இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளன.

6 States asked to extend Lockdown for few days

இந்தியாவில் இதுவரை சுமார் இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இரண்டாம் கட்டமாக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இன்னும் வைரஸ் கட்டிற்குள் வராததால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை நீடிக்க வேண்டுமென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

அதே போல மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. குஜராத், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, அரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.