இந்த 'அதிமுகவுக்கு' அர்த்தம் 'அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்'.. 'ஜெயிக்க வைங்க!'.. பரபரப்பு போஸ்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 26, 2019 02:57 PM
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவை அஜித் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் குறிப்பிட்டு, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போஸ்டர் ஒட்டி பரபரப்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
வரும் டிசம்பர் 2-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் குறித்த விபரங்களை, தேதியுடன் வெளியிடவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்தான், இந்தத் தேர்தல்களை அடுத்து மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கான மறைமுகத்தேர்தலும் நடைபெறவுள்ளது.
ஆம், வேட்பு மனுக்களை பெறுவது, கூட்டணியை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் பிற கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுகவுக்கு அஜித் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற புதிய பெயர்ப் பதத்தை சூட்டி மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் ரைட் சுரேஷ் தனது சின்னமான உழைப்பாளி சின்னத்தில் வாக்களித்து மேயர் பதவியில் வெற்றிபெறச் செய்ய்யுமாறு கேட்டுள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனக்கு அரசியல் ஈடுபாடுகள் இல்லை என்றும், ஒரு சராசரி குடிமகனாக வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையான வாக்களிப்பதை நிறைவேற்றுவதே தனக்கு அரசியலுடன் இருக்கும் உச்சபட்ச தொடர்பு என்றும் ஆஜித் கூறியிருந்த நிலையில், அஜித்தின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி இத்தகைய போஸ்டரை அச்சடித்து, அரசியலில் ஈடுபட்டுள்ள ரைட் சுரேஷின் செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.