‘இப்டி டீமை மாத்திட்டே இருந்தா’... ‘அப்புறம் எப்படி இருக்கும்’... ‘ஏன் அந்த வீரரை எடுக்கல’... ‘வறுத்தெடுத்த முன்னாள் கேப்டன்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 25, 2020 10:46 PM

நியூசிலாந்தில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Kapil Dev Roasted Indian Team Selection, KL Rahul Absence

நியூசிலாந்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் முறையில் இழந்த நிலையில், 2 போட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில்  4 நாட்களிலேயே மோசமாக தோல்வியை சந்தித்து சுருண்டது. இதையடுத்து, இந்த படு தோல்விக்கு சென்ஸ் இல்லாத செலக்சன் முறையே காரணம் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது, ‘ நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த போட்டி குறித்து ஆராய்ந்து பார்த்தோம் என்றால், இந்திய அணியில் ஏன் இத்தனை மாற்றம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஏறக்குறைய புதிய அணி விளையாடுவது போன்றே இருக்கிறது. நிரந்தரமாக அணியில் யாரும் இல்லை. அணியில் அவர்களுக்கான இடத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது வீரர்களின் ஆட்டத்திறனை பாதிக்கும்.

பேட்டிங் ஆர்டரில் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, ராஹானே, புஜாரா போன்ற வீரர்கள் இருந்தும், இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களுக்கு மேல் கூட அடிக்கமுடியவில்லை என்றால், அவர்களால் அங்குள்ள சூழ்நிலையை எதிர்த்து வெல்ல முடியவில்லை என்பதை காட்டுகிறது. இந்திய வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாங்கள் விளையாடிய காலத்திலும், தற்போது நிகழ்ந்து வருவதற்கும் இடையில் ஏராளமான வேறுபாடு உள்ளது. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அணியை கட்டமைக்கும்போது, வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். நீங்கள் ஏராளமான மாற்றங்களை உருவாக்கினால், அதில் எந்த அர்த்தமும் இல்லை.

கே.எல். ராகுல் தற்போது சிறந்த பார்மில் உள்ளார். ஆனால் அவருக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை. இதில் எந்த அர்த்தமும் இல்லை. சிறந்த பார்மில் இருக்கும்போது, அவர் விளையாடுவது அவசியம் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.