‘ஹாய் நாங்களும் கார்ல போறோம்! என்ஜாய் பண்ணும் கரடிகள்’.. வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | May 27, 2019 02:32 PM

ஒரு கரடி குடும்பம் தனது வாகனத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்ததை அந்த வாகனத்தின் உரிமையாளர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

bears family plays inside the car in US the images are viral

அமெரிக்கா டென்ஸி நகரில் 3 கரடிகள் சேர்ந்த கரடி குடும்பம் ஒன்று சுற்றுலா பயணியின் காரில் ஏறி விளையாடியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அந்த காரின் உரிமையாளரும்  சிஎம்ஓ பார்பர்ஷாப் ஓனருமான ஷாட் மொரிஸ் என்பவர் அமெரிக்காவின் 14 நியூஸ் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, 3 கரடிகள் கொண்ட  அந்த கரடி குடும்பம் தனது வாகனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படங்களை அந்த காரின் உரிமையாளரான ஷாட் மொரிஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும், பலரும் கரடி பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags : #BEARS FAMILY #UNITED STATES #VIRAL PHOTOS