'மகளின் திருமண பேச்சுக்காக சென்றவரும் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாலையில் விழுந்து பலி’.. விபத்தான அரசுப்பேருந்தால் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 29, 2019 03:21 PM

ஜெயங்கொண்டம் அருகே, அரசு விரைவுப்பேருந்து ஒன்றை இயக்கி வந்த டிரைவர் சரக்கு லாரி மீது ஏற்றியதால், நடந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததோடு, பேருந்து சல்லடையாக நொறுங்கியுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

bus from chennai to thanjavur gets accident near by ariyalur

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காரைக்குறிச்சி அருகே , சென்னையில் இருந்து தஞ்சாவூர் மார்க்கமாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்தின் முன்கண்ணாடியை உடைத்துக்கொண்டு ரோட்டில் விழுந்து  சென்னை எம்.எம்.டி.ஏ பகுதியில் வசிக்கும் ரகுபதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே பேருந்தில் பயணம் செய்த ரகுபதியின் உறவினர் மற்றும் 11 பேர் படுகாயமடைந்ததை அடுத்து 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலியானவரான ரகுபதி, தன் மகள் லாவண்யாவின் திருமண பேச்சுவார்த்தைக்காக மாப்பிள்ளை வீட்டாரை சந்திக்க சென்றபோதுதான், இந்த சம்பவம் நேர்ந்ததால் அந்த குடும்பம் தீராத சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இதுபற்றிய விசாரித்துள்ள போலீஸார், அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், நீண்ட நேரம் பேருந்தை இயக்கும் டிரைவர்கள் அயர்ச்சி காரணமாக 1 நொடி கண்ணயர்ந்தாலும் இந்த சாலையில் இதுபோன்ற விபத்துக்கள் நடந்துவிட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #ACCIDENT #ARIYALUR #BUS