136 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த விமானம்.. பயணிகள் உயிர்தப்பிய அதிசயம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 04, 2019 05:42 PM

136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம், செயிண்ட் ஜான் நதியில் நிலை தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

boeing 737 slides into florida river with 136 on board no fatalities

கியூபாவின் குவாண்டனமோ கடற்படை தளத்தில் இருந்து 136 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டது போயிங் 737 விமானம். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில் என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமையன்று இரவு போயிங் விமானம் தரையிறங்கியது.

அப்போது ஓடுபாதையின் இறுதியில் இருந்த செயிண்ட் ஜான் நதியில் நிலை தடுமாறி விமானம் விழுந்தது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் அலறினர். ஆற்றுக்குள் கால் பகுதி மட்டுமே விமானம் மூழ்கியதால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இது குறித்து ஜாக்சன்வில் மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில், விமானம் தண்ணீரில் மூழ்கவில்லை. பயணிகள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள். இந்த விபத்தில் 21 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BOING #ACCIDENT #AMERICA