‘மோதியது ஒரு கார்.. விபத்துக்குள்ளான 4 கார்கள்.. மேப் பார்த்துக்கொண்டே வந்த கேப் டிரைவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 02, 2019 04:37 PM

கிண்டி - வேளச்சேரி மெயின் சாலையில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் வெகு வேகமாக வந்த தனியார் கேப் டிரைவர் ஒருவர் கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டே கார் ஓட்டிக் கொண்டு, வெகுவேகமாக வந்துள்ளார். அப்போது சாலையின் இடதுபுறம் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்த ஒரு காரை இடித்து தள்ளியதால், அந்த கார் பார்க்கிங்கில் ஏற்கனவே நின்று கொண்டிருந்த அடுத்தடுத்த கார்களின் மீது மோதி 4 கார்களும் தொடர் விபத்துக்குள்ளாகியுள்ளன.

Cab Driver hits a parking car and that car hits another 3 cars bizarre

இது பற்றி பேசிய தனியார் கேப் டிரைவர், தான் கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டே வழி தேடி வந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கார் குறுகலான சாலை என்பதால் தன்னுடைய காரில் மோதி அங்கிருந்து பத்தடி தூரத்திற்கு முன்னோக்கிச் சென்றதாகவும் கூறுகிறார். 

ஆனால் இந்த விபத்தினால், தனது கேப்க்குதான் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறும் கேப் ஓட்டிக்கொண்டுவந்த இளம் டிரைவர், பணிக்கு சேர்ந்த உடனேயே இத்தகைய பெரும் விபத்தை, தான் நிகழ்த்தியுள்ளதால் தன்னுடைய பணி நிரந்தரம் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறினார்.

இந்த சம்பவத்தில் கார் டிரைவர், பார்க்கிங்கில் இருந்த காரை இடிப்பதற்கு முன்புவரை அந்த பார்க்கிங் காரின் மீது கைவைத்துக்கொண்டு பெரியவர் ஒருவர் அநாயசமாக நின்றுகொண்டிருந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் நடந்த அடுத்த நொடிதான், கேப் டிரைவரின் கார், பார்க்கிங் காரின் மீது மோதியுள்ளது.

விபத்துக்குள்ளான 4 கார்களில் கேப் டிரைவரின் காரை தவிர்த்து மற்ற கார்கள் அனைத்தும் டாக்ஸி, அல்லாத சொந்த பயன்பாட்டுக்கான தனி உரிமையாளர்களின் கார் என்பதும், இந்த விபத்தில் கேப் டிரைவர் உட்பட யாருக்கும் எவ்வித காயமும் இல்லாமல் தப்பித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #ACCIDENT #CARS