'வைத்தியம் பாக்க தானே'...'என் பொண்ணு போச்சு'...'இளம் டாக்டர்'க்கு நிகழ்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 17, 2019 11:59 AM

கோவா கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்து,இளம் மருத்துவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young doctor drowns in Goa beach while attempting to take a selfie

ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா.இவர் எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு,கடந்த வருடம் கோவா அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்ந்தார்.இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை தனது தோழியுடன் கடற்கரைக்கு சென்ற ரம்யா,கரையில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்து கொண்டிருந்தார்.இதையடுத்து கரையை தாண்டி சிறிது தூரம் சென்ற அவர்,அலை வரும் போது திரும்பி நின்று கொண்டு செல்ஃபி எடுத்து கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் திடீரென கிளம்பிய ராட்சச அலை ஒன்று ரம்யாவை கடலுக்குள் இழுத்து சென்றது.

இதனை சற்றும் எதிர்பாராத ரம்யாவின் தோழி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.உடனே கடலுக்குள் இறங்கிய மீனவர்கள் ரம்யாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.ஆனால் ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றதால், ரம்யாவை சடலமாக தான் மீனவர்கள் மீட்டர்கள்.இதனிடையே அவருடைய உடல் இன்று காலை அவருடைய சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்படவுள்ளது.

இந்நிலையில் மருத்துவம் படித்து,மருத்துவத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைத்த ரம்யாயின் கனவு,இப்படி பாதியிலேயே கலைந்து விட்டதே என, ரம்யாவின் சொந்த ஊரை சேர்ந்த மக்கள் சோகத்துடன் கூறினார்கள். தந்தையை இழந்த ரம்யாவின்,தாயும் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் ஒருவரும் ஆந்திராவில் வசித்து வருகிறார்கள்.மருத்துவராக சென்ற எனது மகள் இப்படி சடலமாக வருகிறாளே என,அவரது தாய் அழுதது அனைவரையும் கலங்க செய்தது.

Tags : #ACCIDENT #DOCTOR #SELFIE #BEACH #GOA BEACH #ANDHRA PRADESH