DISTURBING VIDEO: 'நிக்குற இடம் மறந்து போச்சா'...'செல்ஃபி' எடுக்க முயற்சித்தவரின்...'பரிதாப நிலை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | May 02, 2019 01:30 PM
மும்பையில் செல்ஃபி எடுக்க முயற்சித்த நபர் தவறி விழும் விடியோவை,மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளது.

மும்பை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று காண்போரை அதிரவைக்கும் வகையில் அமைந்துள்ளது.அந்த வீடியோவை வெளியிட்டு செல்ஃபியோ அல்லது சகாசமோ அதற்கு பாதுகாப்பு என்பது நமக்கு முக்கியம் என்பதனை வலியுறுத்தியுள்ளது.இது போன்ற செயல்களுக்காக உயிரை பணயம் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இருக்கும் நபர் உயரமான கட்டிடத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் இருந்து கீழே தவறி விழுகிறார்.நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ,ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமையும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்
Attempt for the most daring selfie? Or just another irresponsible adventure? Whatever this was for, it clearly wasn’t worth the risk! #SafetyFirst pic.twitter.com/vzBYEZs54Y
— Mumbai Police (@MumbaiPolice) May 2, 2019
