ரூ.23 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் கொள்ளை.. அரசுப்பேருந்தில், 'காத்திருந்து கைவரிசை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | May 14, 2019 04:06 PM
அரசுப்பேருந்தில் பயணம் செய்த கேப்பில், 23 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர வளையல்களை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து வைர வளையல்களை சென்னை கஸ்டமர் ஒருவருக்கு டெலிவரி செய்வதற்காக சென்னைக்கு வந்துகொண்டிருந்த டிசைனர் ஒருவர் தனது 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர வளையல்கள் அரசுப்பேருந்தில் திருடு போனதாக தெரிவித்துள்ளார்.
வைரக்கல் பதித்த வளையல்களை சென்னை கஸ்டமர் ஒருவருக்கு டெலிவர் செய்வதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு அரசுப்பேருந்து நகையுடன் பயணம் செய்துவந்த பெண் டிசைனர், 55 வயதான தாரா சந்த் என்பவர். இவர்தான் வைர நகைகளை பறிகொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.இவர் ஒரு பேகில் 23 லட்சம் மதிப்புள்ள வைர வளையல் நகைகளை ஒரு பாக்ஸில் வைத்துக் கொண்டு வந்ததாகவும், ஆனால் பேருந்தில் பயணம் செய்துவிட்டு இறங்கும்போது, பேகை சோதனை செய்தபோது வைர நகைகள் காணாமல் போனதை அறிந்ததாகவும், கோயம்பேடு பேருந்து நிலைய காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய போலீஸார், ‘திருச்சியில் இருந்து சென்னை வரை வந்த தாரா சந்த், தனது நகைகள் கொண்ட பையினை அரசுப்பேருந்தின் லக்கேஜ் வைக்கை ரேக்கில் வைத்துவிட்டு, அதற்கு நேரான, அதே வரிசை இருக்கையில் அமர்ந்துள்ளார். அந்த நகைகள் திருச்சியில் காணாமல் போனவையா அல்லது சென்னை வந்து காணாமல் போனவையா என தெரியவில்லை. ஆனால் இடையில் ஒரு பயணி இறங்கியதாக பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார். பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கண்டுபிடித்து விசாரித்துவருகிறோம்’ என தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் குறிப்பிட்டுள்ளது.