'விஷத்தை எடுக்க வாயில் பொருத்திய கருவி'... 'வெடித்து பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 17, 2019 06:39 PM

குடலில் இருந்த விஷத்தை எடுக்க பயன்படுத்தப்பட்டக் கருவி வெடித்ததில், பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman dies after explosion in her mouth during gastric lavage

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே, ஜலாலிப் பகுதியை சேர்ந்தவர் ஷீலாதேவி. 40 வயதான இவர் மயங்கிய நிலையில், ஆலம்பூர் சுப்கரா கிராமத்தில் விழுந்து கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள், வி‌ஷம் அருந்தி ஷீலாதேவி தற்கொலைக்கு முயன்றதை அறிந்தனர்.

இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஷீலாதேவியை போலீசார் மீட்டு, அலிகாரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் ஷீலா தேவியின் குடலில் வி‌ஷம் இருப்பது தெரிந்தது. அதன்பின்னர், ஷீலாதேவி வாயில் மருத்துவக் கருவியை பொருத்தி, சிறிய டியூப் மூலம் வி‌ஷத்தை வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சித்தனர்.

அப்போது திடீரென்று ஷீலா தேவி வாயில் இருந்த மருத்துவக் கருவி வெடித்தது. அந்த அறையில் தீப்பிடித்து புகை மண்டலமானது. இதனால் பயத்தில் அனைவரும் அலறினர். உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தீயை அணைத்தனர். மருத்துவக் கருவி வெடித்ததில், ஷீலா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஷீலாதேவி உடலை பிரேத பரிசோதனை நடத்த அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறும் போது, 'எங்கு தவறு நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து வருகிறோம். ஷீலாதேவி, அலுமினியம் பாஸ்பேட் உள்ள மாத்திரைகளை சாப்பிட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. அதிலிருந்து பாஸ்பென் வாயு மற்றும் அலுமினியம் ஆக்சைடு வாயு வெளியேறி இருக்கலாம்.

இந்த வாயுக்கள் எளிதில் எரியக் கூடிய தன்மை கொண்டது. அதனால் மருத்துவக் கருவி வெடித்து இருக்கலாம் என்றார். பிரேதப் பரிசோனைக்குப் பிறகே ஷீலாதேவி எந்தவிதமான வி‌ஷத்தை அருந்தினார் என்பது தெரிய வரும்' என்று கூறினார். கருவி வெடித்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #ACCIDENT #POISION #DIES #EXPLOSION