'ஏ.சி.யில் கேஸ் கசிந்து தீ விபத்து'... 'தூங்கியபோது தாய், தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 15, 2019 11:13 AM

ஏ.சி. இயந்திரத்தில் மின் கசிவு காரணமாக,  மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

home air conditioner burst in tindivanam 3 people dead

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜ். இவர் அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ளார். இவர் நேற்று இரவு தனது மனைவி, மகன் கவுதம் ஆகியோருடன் தனது வீட்டில் ஏசி பொருத்தப்பட்ட அறையில் உறங்கி கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில், இவர்கள் வீட்டிலிருந்து, சத்தமும் புகையும் வந்துள்ளது.

இதனை உணர்ந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  அதேநேரம் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நெருப்பை அணைத்தனர். அதன்பின்னர் தீயில் மாட்டியவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் 3 பேரும் ஏற்கனவே தீயில் கருகி உயிரிழந்தனர். 

மின்கசிவு ஏற்பட்டு ஏசி இயந்திரத்திலிருந்து கேஸ் கசிந்து, அதனை சுவாசித்ததால் மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தூக்கத்தில் இருந்ததால், அவர்களால் கேஸ் கசிவை உணர முடியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. காவல்துறையினர் உயிரிழந்த மூவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த கவுதமுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #AC #GASLEAK #ACCIDENT