ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு!.. ஊருக்கு திரும்பிய போது நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 15, 2019 11:17 AM

சென்னை சாலை விபத்து ஒன்றில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Asian Games gold medalist Balakrishnan died in road accident

சென்னை செனாய் நகரில் விளையாட்டு வீரர் பாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2010 -ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் விடுமுறைக்காக சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். உறவினரை பார்த்துவிட்டு அரும்பாக்கம் வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது முன்னே சென்ற ஜல்லிக் கலவை லாரியை முயன்ற போது எதிர்பாராத விதமாக வலுக்கி லாரிக்கு அடியில் விழுந்துள்ளார். இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : #ACCIDENT #CHENNAI