'கொரோனாவால் வீட்டிலிருந்தே வேலை’... ‘சீக்கிரமே தீர்ந்துபோகும் இன்டெர்நெட்’... ‘ஒரு மாதத்திற்கு’... ‘இலவச இணைய ஆஃபர் வழங்கும் நிறுவனம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 21, 2020 11:49 AM

கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்க பிரபல நிறுவனம் முன்வந்துள்ளது.

BSNL offers free broadband for a month to work from

கொரோனாவால் பல நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சந்திக்கும் தலையாய பிரச்சனை இண்டெர்நெட் விரைவில் தீர்ந்து விடுவது. இந்நிலையல், பிஎஸ்என்எல் நிறுவனம் இலவசமாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய சேவையை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் அத்தனை பேருக்கும் இலவச இணைய பிராட்பேண்ட் சேவை Work@Home என்னும் டேட்டா ப்ளான் மூலமாக வழங்கப்படுகிறது. இதனால் தினமும் அத்தனை லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கும், 10 Mbps இணைய வேகத்தில் தினமும் 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது.

புதிய பிராண்ட்பேண்ட் சேவையைப் பெறுபவா்கள் இணைப்பை அளிப்பதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், ‘மோடம்’ பெறுவதற்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் இவர்களுக்கும் இந்த இலவச இணைய சேவை பொறுந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #BSNL #OFFER #WORK FROM HOME