அதே ‘பழைய’ பிளான்களின் விலையில்... ‘டேட்டா’ மட்டும் ‘டபுள்’!... ‘அசத்தல்’ ஆஃபரை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Saranya | Mar 03, 2020 05:00 PM

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

Vodafone Idea Brings Double Data Offer On Prepaid Plans

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் ரூ 249, ரூ 399 மற்றும் ரூ 599 பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதல் 1.5 ஜிபி டேட்டாவுடன் மொத்தமாக தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ 249 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கும், ரூ 399 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா 56 நாட்களுக்கும், ரூ 599 சலுகையில் 3 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது.

அத்துடன் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சந்தாவும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஐடியா மூவிஸ் மற்றும் டிவி செயலியை பயன்படுத்துவதற்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. இந்த புதிய இருமடங்கு டேட்டா சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை எதுவரை வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நெருக்கடி சூழலை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #MONEY #AIRTEL #JIO #VODAFONE #BSNL #DOUBLEDATA #OFFER