குறைந்த விலையில் புதிய ‘அன்லிமிடெட்’ பிளான்... கூடுதல் ‘வேலிடிட்டி’... ‘அசத்தல்’ ஆஃபர்களை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்...

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Saranya | Feb 10, 2020 10:53 PM

இந்தியாவில் வோடஃபோன் ரூ 499க்கு புதிய ப்ரீபெய்டு பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

Vodafone Rs 499 Rs 555 Prepaid Plan Validity Details Inside

வோடஃபோன் புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ 499 பிளானில் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவை 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

அத்துடன் வோடஃபோனின் ரூ 555 ப்ரீபெய்ட் பிளானிலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்த இந்த பிளானில் தற்போது 77 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. வோடஃபோனின் இந்த பிளானைப் பொறுத்தவரை தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சலுகைகளுடன் ஒராண்டுக்கான வோடஃபோன் ப்ளே மற்றும் Zee5 சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. சில வடமாநிலங்களில் மட்டும் ரூ 555 பிளானிற்கான வேலிடிட்டியை 77 நாட்களிலிருந்து 70 நாட்களாக வோடஃபோன் குறைத்துள்ளது.

Tags : #MONEY #AIRTEL #VODAFONE #JIO #BSNL #OFFER