'இந்தியர்களுக்கு மட்டும் தான் இந்த ஜாக்பாட்'... 'நெட்பிலிக்ஸ் அதிரடி'... இன்ப அதிர்ச்சியில் பயனாளர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 22, 2020 11:45 AM

தற்போதைய இன்டர்நெட் உலகில் இளசுகள் முதல் பெருசுகள் வரை பலரும் கேட்பது உனக்கு அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் அக்கௌன்ட் இருக்கா என்பது தான். அந்த வகையில் நெட்பிலிக்ஸ் பலராலும் பெருமளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

Netflix India is offering the first month at Rs 5

நெட்பிலிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் அதன் பயன்பாட்டை அதிகரிக்கப் பல புதிய சலுகைகளைச் சோதனை முறையில் செய்து வருகிறது. இதன்மூலம் புதிய பயன்பாட்டாளர்களைப் பெற முடியும் என நெட்பிலிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு வெறும் ரூ.5 க்கு ஒரு மாத கால சேவையை நெட்பிலிக்ஸ் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவையான நெட்பிலிக்ஸ் உடன் இணையும் பயனர்கள் அவர்களின் முதல் மாத சந்தாவை வெறும் ரூ.5 க்கு பெறலாம் என்று நெட்பிலிக்ஸ் அறிவித்துள்ளது. ஆனால் இது எல்லா பயனாளர்களுக்குப் பெற முடியுமா என்றால் இல்லை. அதற்கு சில நிபந்தனைகளையும் நெட்பிலிக்ஸ் குறிப்பிட்டுள்ளது. அதன்படி முதல் முறையாக நெட்ஃபிக்ஸ் சேவையுடன் இணையும் முதல் முறை சந்தாதாரர்களுக்கு மட்டுமே இந்த 5 ரூபாய் சலுகை கிடைக்கும்.

குறிப்பாக இதற்கு முன் ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் நெட்பிலிக்ஸ் பயன்படுத்தாத பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இதனிடையே நெட்பிலிக்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.199 மொபைல் திட்டம், ரூ.499 திட்டம், ரூ.649 ஸ்டாண்டர்ட் திட்டம் மற்றும் ரூ.799 பிரீமியம் திட்டம் என்ற நான்கு திட்டங்களை வைத்துள்ளது. இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து வெறும் ரூ.5 செலுத்தி உங்கள் சந்தாவைப் பெற்றுக்கொள்ளலாம்.

Tags : #NETFLIX #OFFER #RS 5