தினமும் ‘3 ஜிபி’ டேட்டா... ‘கூடுதலாக’ 71 நாட்கள் ‘வேலிடிட்டி'... ‘பிரபல' நிறுவனத்தின் ‘அசத்தல்’ ஆஃபர்...
முகப்பு > செய்திகள் > வணிகம்பி.எஸ்.என்.எல். நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ 1999 பிளானில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகை ஜனவரி 26ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த பிளானில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வேலிடிட்டி 436 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். ரூ 1999 பிளானில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் பிரத்யேக ரிங் பேக் டோன் ஆகியவை வழங்கப்படுகிறது.
Tags : #MONEY #AIRTEL #JIO #BSNL #VODAFONE #OFFER #REPUBLICDAY
