'விலையோ ரொம்ப கம்மி'... 'தினமும் 10 ஜிபி டேட்டா'... 'களத்தில் குதித்த பிரபல நிறுவனம்'...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, 2 புதிய பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மற்ற தனியார் நிறுவனங்கள் எல்லாம் 4G சேவையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அசத்தி வருகின்றன. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 3G சேவையையே வழங்கி வருகிறது. இதனால் போட்டியை சமாளிக்க, இப்போதுள்ள 3G ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தி தேர்தெடுக்கப்பட்ட வட்டங்களில் அதாவது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கொல்கத்தா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற பகுதிகளில் 4G சேவைகள் வழங்கி வருகிறது.
தற்போது இந்த 4G சேவையில் இரண்டு புதிய டேட்டா ரீசார்ஜ் பேக்குகளை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. அவை, ரூ.96 மற்றும் ரூ.236 என்கிற இரண்டு திட்டங்கள் ஆகும். அதன்படி,
ரூ.96-திட்டம்: இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 10 GB டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தில் மொத்தமாக 280 GB அளவிலான டேட்டா நன்மைகள் கிடைக்கும். ஆனால் எஸ்எம்எஸ் சலுகைகள், அழைப்பு நன்மைகள் எதுவும் கிடைக்காது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ.236 திட்டம்: அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4G திட்டமான ரூ.236 திட்டத்தில் தினசரி 10 GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மொத்தமாக இந்த திட்டத்தில் 840 GB அளவிலான டேட்டா நன்மைகள் கிடைக்கும். இதிலும், எஸ்எம்எஸ் சலுகைகள், அழைப்பு நன்மைகள் எதுவும் கிடைக்காது.
