கூடுதலாக ‘50 நாட்கள்’ வேலிடிட்டி... ‘அதிரடி’ சலுகையுடன் ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘பிரீபெய்ட்’ பிளான்...

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Saranya | Feb 14, 2020 07:21 PM

பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் ரூ 999 பிளானில் கூடுதல் வேலிடிட்டி ஆபரை அறிவித்துள்ளது.

BSNL Increases Validity Of Rs 999 Prepaid Plan Details Inside

பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் ரூ 999 பிரீபெய்ட் பிளானில் 270 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முன்னதாக இந்த பிளானில் 220 நாட்களே வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 50 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 999 பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் பிளானானது இலவச உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் மும்பை, டெல்லி வட்டங்கள் உள்ளிட்ட தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. ஆனால் இந்த பிளான் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பையும் கொண்டுள்ளது. வாய்ஸ் ஒன்லி பிளானான இது எந்தவிதமான டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ் நன்மைகளையும் வழங்காது. மேலும் கூடுதல் நன்மையாக இந்த ரூ 999 ப்ரீபெய்ட் பிளானானது 2 மாத பி.எஸ்.என்.எல் ட்யூன்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

Tags : #MONEY #AIRTEL #VODAFONE #JIO #BSNL #OFFER