'ஒரு காலத்துல 'தனி காட்டு ராஜா' போல இருந்தியே'... 'கூண்டோடு வெளியேறும் 79 ஆயிரம் ஊழியர்கள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jan 31, 2020 04:23 PM

இதுவரை இல்லாத அளவிற்கு மத்திய தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து,  78,569 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுகிறார்கள்.

78,300 BSNL employees to step down on January 31

ஒரு காலத்தில் தனி ஒரு சாம்ராஜ்யம் நடத்தி வந்த அரசு தொலைபேசித் துறை, அவசரமாக இணைப்புப் பெற வேண்டுமானால், அதிலும் ஒற்றைத் தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அளவில் பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பின்னர் பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) உருவாக்கப்பட்டது. இதனிடையே காலமாற்றத்தில் தொலைத்தொடர்புத் துறையில் நடந்த புரட்சி, மற்றும் தனியார் நிறுவனங்களின் போட்டியின் காரணமாக, கடந்த  2010 முதல் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தது.

இந்நிலையில் நிதிப் பிரச்சினை, தொழில் போட்டி போன்ற எண்ணற்ற பிரச்னைகளால் தள்ளாடி கொண்டிருந்த பிஎஸ்என்எல், ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்று கருதி விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தன. இதற்கு 50 மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்கள் அனைவரும் இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் பிஎஸ்என்எல் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடும்.

ஒருகாலத்தில் தனித் தன்மையுடன் கோலோச்சிக் கொண்டிருந்தது தொலைபேசித் துறைக்கு இந்த நிலையா என அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மனவருத்தத்துடன் நிறுவனத்தை விட்டு செல்கிறார்கள். மாபெரும் ஊழியர்கள் குறைப்புக்குப் பின் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

Tags : #BSNL #BSNL EMPLOYEES #RETIREMENT