‘திருமணமான’ ஒரே மாதத்தில்... வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி ஊழியருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 11, 2019 07:04 PM

சென்னையில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai A Month After Marriage IT Employees Wife Commits Suicide

சேலத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சென்னை சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். அவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த மீனா என்பவருக்கும் கடந்த நவம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து 10 நாட்களுக்கு முன்பாக புதுமணத் தம்பதி மேடவாக்கத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கம் போல வேலைக்குச் சென்றுவிட்டு ராமலிங்கம் வீடு திரும்பியபோது, மீனா மின்விசிறியில் புடவையால் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கியுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன ராமலிங்கம் உடனடியாக அவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுள்ளார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் மீனாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மீனாவிற்கு விருப்பமில்லாமல் இந்த திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கு முன் மீனா யாரிடமெல்லாம் ஃபோனில் பேசினார் என்ற தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #CHENNAI #IT #EMPLOYEE #HUSBAND #WIFE #SUICIDE