"தம்பி...! நீங்க பண்றதுக்கு பேரு பேட்டிங்கா..." "பேட்ஸ்மேன்னு வேற சொல்லிக்கிறிங்க..." 'ரஹானேயை' வெளுத்து வாங்கிய 'ஹர்பஜன்சிங்'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Mar 02, 2020 04:12 PM

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான  2வது டெஸ்ட் போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜின்கியா ரஹானேயை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் காட்டமாக விமர்சித்துள்ளார்.

harbhajan singh slammed Ajinkya Rahane\'s batting style

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெரிய போராட்டமின்றி தோல்வி அடைந்தது. ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியை தவற விட்டாலும் 2வது டெஸ்டில் இந்திய வீரர்கள் சுதாரித்துக் கொள்வார்கள் என ரசிகர்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கையும் வீண்போனது.

முதல் இன்னிங்சில் 242 ரன்களில் ஆட்டமிழந்த இந்திய அணி 2வது இன்னிங்சில்  46 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 132 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.

இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடக் கூடிய அஜின்கியா ரஹானே  மிக மோசமாக விளையாடினார்.

நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை பார்த்து, பேட்டிங்கே ஆடத்தெரியாத வீரரை போல் திணறினார் . ஜேமிஷன் மற்றும் வாக்னர் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2 முறை ஹெல்மெட்டில் அடி வாங்கினார்.

அதன்பின்னர் விட்டால்போது என 9 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினார். இந்த ஆட்டத்தை பார்க்கும்போது ஏதோ பந்துவீச்சாளர் பேட்டிங் செய்வது போல் இருந்தது என்று ஹர்பஜன்சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விமர்சித்துள்ள அவர், அஜின்கியா ரஹானே டெய்ல்-எண்டர் போல் விளையாடினார். அவர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதை மறந்து விட்டார் போல. இது ரஹானேவின் மிகவும் மோசமான இன்னிங்ஸ் என தெரிவித்துள்ளார்.

Tags : #HARBAJAN SINGH #AJINKYA RAHANE #SLAMMED #WORST BATTING