“துடிதுடித்த நாய்”!.. ‘இரக்கமின்றி கொன்ற மனிதர்’!.. பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 14, 2019 12:56 PM

கழிவுநீர் கால்வாயில் நாயை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

man beat the dog and tied the leg and throws into the drainage

சென்னை மூலகொத்தலம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் நாயை அடித்து, அதன் கால்களை கட்டி சாலையில் இழுத்து சென்று அருகில் இருந்த கால்வாயில் வீசி எறிகிறார். அப்போது, அந்த நாயின் கால்கள் கட்டபட்டதால் அந்த நாய் கழிவுநீரில் துடிக்க துடிக்க உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, சென்னை வண்ணாரபேட்டையில் உள்ள மூலகொத்தலம் பகுதியில் கடந்த 11ஆம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில், இந்த நபரின் செயல் வீடியோவாக சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ் ஆப்பில் வந்துள்ளது.  இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர் மகாதேவன் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த புகாரின் அடிப்படையில் சென்னை வண்ணாரபேட்டை காவல்நிலைய போலீசார் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் புகைப்படத்தில் இருந்த அந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #CHENNAI #DOG