'தேசிய அளவில் முதலிடம் பிடித்த கேரள மாணவி.. 2-ஆம் இடத்தில் சென்னை மாணவர்’.. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 06, 2019 05:26 PM

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வழிக்கல்வி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகியுள்ளன.

Girl Studfent from Kerala is the all India topper, CBSE Reults

இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை நிகழ்ந்த சிபிஎஸ்இ வழிக்கல்வியிலான 10-ஆம் வகுப்புத் தேர்வை 27 லட்சம் பேர் எழுதியிருந்தனர். மிக அண்மையில்தான் 12-ஆம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு வெளியான சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானதோடு, இதில் 91.1 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த வருடம் 86.7 % பேர் தேர்ச்சி அடைந்ததை ஒப்பிட்டால், இந்த வருடம் நல்ல தேர்ச்சி விகிதம் என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே போவதைக் காண முடிகிறது. இதில் முதல் 3 இடங்களை திருவனந்தபுரம், சென்னை, அஜ்மீர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதிலும் திருவனந்தபுரத்தில் 99.5 % மாணவர்களும், சென்னையில் 99% மாணவர்களும், அஜ்மீரில் 95.89 % மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆக இந்தத் தேர்வில், 499 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 7 மாணவர்கள், 6 மாணவிகள் உட்பட 13 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.   499 மதிப்பெண்கள் எடுத்து திருவனந்தபுரம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பாவனா சிவதாஸ் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் சென்னை மாணவர் டி.யாஷாஸ் 498 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

Tags : #CBSE #EXAM #KERALA #BHAVANA N SIVADAS #TRIVANDRUM #CHENNAI