'லேப்டாப்' ஏன் தரல?.. கேள்வி கேட்ட 'மாணவனுக்கு'.. ஆசிரியரால் 'நடந்த' கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 09, 2019 01:02 PM

தமிழக அரசின் இலவச லேப்டாப் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க பள்ளியில் லேப்டாப் ஏன் தரல? என்று கேள்வி கேட்ட மாணவனை, ஆசிரியர் சரமாரியாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Teacher Brutally attacking student in School, Video Goes Viral

அந்த வீடியோவில் கடலூரை சேர்ந்த மாணவன் ஒருவன் லேப்டாப் ஏன் தரல? என்று ஆசிரியரிடம் கேட்க, பதிலுக்கு அவர் அந்த மாணவனை அடித்து நொறுக்குகிறார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என சுற்றி நிற்கும் யாரும் அந்த மாணவனுக்கு உதவி செய்ய முன்வராமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.

 

வீடியோ எடுப்பதற்கு முன்னால் அந்த மாணவன் என்ன பேசினான்? என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் மாணவனை, ஆசிரியர் ஒருவர் இப்படி அடிப்பது நியாயமல்ல என்று இதைப்பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.