பத்து லட்சம் கடன்...அரசுக்கு கடிதம் எழுதிட்டு.. வெஷத்தை குடிச்ச இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 26, 2019 08:15 PM

இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்தைத் தொடர்ந்து பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.இதனால் பேனர் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.இந்த நிலையில் பேனர் தொழில் நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Banner Shop Owner Tried to Commit Suicide in Madurai

மதுரை மாவட்டம் கீழமாத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கடந்த ஒரு வருடமாக சமயநல்லூர் பகுதியில் பேனர் கடை நடத்தி வருகிறார்.தமிழக அரசு பேனருக்கு தடை விதித்திருப்பதால் பேனர் தொழில் நடத்தி வருபவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.அந்த வகையில் ரூபாய் 10 லட்சம் கடன் பெற்று கடை நடத்தி வந்த விக்னேஷும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் பணம் கொடுத்தவர்களும் பணத்தை திரும்பக்கேட்டு விக்னேஷை தொந்தரவு செய்துள்ளனர்.இதனால் மனமுடைந்த விக்னேஷ் தமிழக அரசுக்கும்,நீதித்துறைக்கும் கடிதம் எழுதிவைத்து விட்டு எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.