WATCH VIDEO: மொத 'பரிசு' யாருக்கு?.. குழம்பும் நெட்டிசன்கள்.. பதில் தெரிஞ்சா சொல்லுங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 08, 2019 07:05 PM
சில நேரங்களில் எதார்த்தமாக செய்யும் செயல்கள் கூட திடீர் வைரலாக மாறிவிடும். அதேபோல ஒன்று சொன்னது போலவும் அமைந்து விடும். அந்த வகையில் சிறுமிகளின் ஓட்டப்பந்தய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தயம் ஒன்றில் சிறுமிகள் வேகமாக எல்லைக்கோட்டை நோக்கி ஓடி வருகின்றனர். இருபுறமும் விளையாட்டு ஆசிரியர்கள் நின்று சிறுமிகளின் ஓட்டத்தை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.
முதல் பரிசே மூணு வாங்க வேண்டி வரும் போலயே pic.twitter.com/f567Cg6VTe
— முகிலன் ™ (@MJ_twets) October 4, 2019
இந்தநிலையில் எல்லைக்கோட்டை நெருங்கும் போது சிறுமிகள் மூவரும் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரி எல்லைக்கோட்டை தாண்டுகின்றனர். ஒன்று சொன்னது போல மூவரும் தாண்டுவதால் முதல் பரிசே மூன்று வாங்கணுமா? இல்லை முதலில் இருந்து சிறுமிகளை ஓடி வர சொல்ல வேண்டுமா? என்ற விவாதம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.
மொத பரிசு யாருக்கு கொடுக்கணும்னு நீங்க நெனைக்கறீங்க?.. கமெண்ட்ல சொல்லுங்க!
