'நாங்க எல்லாம் கரும் சிறுத்தை' ... 'எப்போமே GUN மாரி நிப்போம்'...'சென்னை பஸ் டே'யில் நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 18, 2019 12:14 PM

பஸ் டே கொண்டாட்டத்தின் போது,பேருந்து கூரையிலிருந்து மாணவர்கள் கொத்து கொத்தாக கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai students falling from top of the bus while celebrating bus day

சென்னை மக்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருப்பது,பஸ் டே என்ற பெயரில் சில கல்லூரி மாணவர்கள் கொடுக்கும் குடைச்சல் தான்.கோடை விடுமுறை முடிந்தாலே மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது இந்த மாணவர்கள் தான்.இதனிடையே நேற்று கல்லூரிகள் மீண்டும் திறந்ததால் மாணவர்களின் அட்டுழியம் மீண்டும் ஆரம்பமானது.சட்டவிரோதமாக பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் மாநகரப் பேருந்துகளையும், அதிலிருந்தவர்களையும் ஒரு வழி பண்ணிவிட்டார்கள். ஆனால் இறுதியில் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்து போனது.

பஸ் டே கொண்டாடிய மாணவர்கள்,திடீரென மாநகர பேருந்தின் கூரையில் மீது ஏறி கூச்சலிட்டவாறு வந்தனர்.அப்போது பேருந்தின் முன்பு பைக்கில் சென்ற மாணவர்கள் சிலர் திடீரென பிரேக் போட்டதால், பேருந்து ஓட்டுனரும் திடீரென பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் கூரையின் மீது அமர்ந்து வந்த மாணவர்கள் கொத்து கொத்தாக கீழே விழுந்தார்கள்.

பேருந்து மெதுவாக சென்றதால் எந்த மாணவர்களுக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.இந்நிலையில் மாணவர்கள் கீழே விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #COLLEGESTUDENTS #CHENNAI COLLEGE #BUS DAY #TOP OF THE BUS