‘ராணுவத்தில் இருக்கும்போது மனைவி சொன்னது’.. நிறைவேற்றிய ‘தல’ தோனி..! வைரல் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 20, 2019 07:52 PM

தோனி ராணுவப் பணியில் இருந்தபோது புதிய கார் அவருக்காக காத்திருப்பதாக அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், அந்த காரை தோனி ஓட்டிப்பார்த்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MS Dhoni spotted driving his new Jeep Grand Cherokee SRT for the first

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி, உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் இந்திய ராணுவத்தில் பணியாற்ற சென்றார். இரண்டு மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றிய தோனி, காஷ்மீரில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அதனால் அப்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி விளையாடவில்லை. மேலும் தற்போது நடந்து வரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தோனி ராணுவத்தில் இருந்தபோது, அவரது மனைவி சாக்‌ஷி தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய காரான ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் (Jeep Grand Cherokee Trackhawk) புகைப்படத்தைப் பதிவிட்டு இது ‘தோனியின் பொம்பை’ என்றும் அவரின் வருகைக்காக காத்துள்ளது என்றும் பதிவிட்டிருந்திருந்தார். இந்த நிலையில் அந்த காரை தோனி விமான நிலையத்தில் இருந்து ஓட்டிவந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #MSDHONI #TEAMINDIA #JEEP #SAKSHI #CAR